மட்டக்களப்பில் தீயில் எரிந்த நிலையில் பெண் சடலமாக மீட்பு............

 மட்டக்களப்பில் தீயில் எரிந்த நிலையில் பெண் சடலமாக மீட்பு............

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கூளாவடி பகுதியில் பெண் ஒருவர் தீயில் எரிந்த நிலையில் இன்று (20) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கூளாவடியைச் சேர்ந்த 57 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயாரான வி.விஜயராணி என்பவரே சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.

குறித்த பெண் சக்கரை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் உண்டான மன உளைச்சலின் விளைவாக இன்று பகல் வீட்டின் முற்றத்தில் தனக்கு தானே அவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டி தற்கொலை செய்து கொண்டதாகவும் பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு  சென்ற பொலிஸார், உயிரிழந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

அதேநேரம், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Comments