மட்டக்களப்பு மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்: அருண் தம்பிமுத்து................
(வரதன்) மட்டக்களப்பு மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் அவர்கள் எதிர்பார்க்கும் மாற்றம் ஒரு தொடர்ச்சியாக ஒரு கட்சியில் இருந்து கொண்டு இன்னொரு கட்சியில் சென்று விட்டு சொல்வதல்ல மாற்றம். மட்டக்களப்பு மக்கள் எதிர்பார்ப்பது புதியவர்கள் மட்டுமல்ல தகுதியானவர்கள் வரவேண்டும் என்பதுதான். தகுதியானவர்கள் என்றால் அவர்கள் இந்த மண்ணுக்கு ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கான அனைத்து தகுதிகளையும் பெற்றவர்களாக இருக்க வேண்டும். என பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியில் போட்டியிடும் வேட்பாளரும், அக்கட்சியின் தலைவருமான அருண்மொழிவர்மன் தம்பிமுத்து தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி நகரில் தமது தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்த போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த சூழ்நிலையில் அரசு மாறினாலும் தமிழ் மக்களின் தேவைகள் இன்னும் இருக்கின்றன. அதே வேளை எமது மக்களின் உரிமை பிரச்சினைகளும் இருக்கின்றன. எமது உரிமைகளை நாங்கள் வென்றெடுக்க வேண்டிய நிர்பந்தம் இருக்கின்றது. அதே போல் இன்று தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு அரசியலில் ஒரு புதிய மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்பது அவர்களது எதிர்பார்ப்பாக இருக்கின்றது. நாங்கள் எந்த கிராமத்துக்கு சென்றாலும் ஒற்றுமை இல்லை என்பதை கூறுகிறார்கள்.
தமிழர்கள் பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பதற்காக பல வழிகள் இருக்கின்றன. கீரை கடைக்கும் எதிர் கடை வேண்டும் என்பதை மக்கள் உணர்கிறார்கள். தமிழர் விடுதலைக் கூட்டணியை பொறுத்தவரையில் நாங்கள் பாரம்பரிய தமிழ் கட்சி மாத்திரமன்றி தமிழ் தேசிய இனத்திற்கு ஒரு அடையாளத்தை கொண்டு வர வேண்டும் என்று ஒரு எண்ணத்திலே எமது செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
ஈழத் தமிழர்களுக்கான ஒரு அரசியல் தீர்வு வரவேண்டும் என்பதில் நாங்கள் தொடர்ச்சியாக அந்த விடயத்தில் தெளிவாக இருக்கின்றோம். இன்று மட்டக்களப்பு மாவட்ட மக்களை பொறுத்தவரையில் அரசியல் மாற்றம் என்பது நிச்சயமாக வரவேண்டும் என்பது விடயமாகும். அதற்கான வழிகளை மக்கள் தேடுவார்கள் என நம்புகின்றோம். அந்த அடிப்படையில்தான் எமது செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. என அவர் இதன்போது தெரிவித்தார்.
Comments
Post a Comment