கல்லடி சுவாமி விபுலானந்தர் முதியோர் இல்ல சர்வதேச முதியோர் விழா ........

 கல்லடி சுவாமி விபுலானந்தர் முதியோர் இல்ல சர்வதேச முதியோர் விழா ........

2024 சர்வதேச முதியோர் விழா மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்ற அனுசரணையில்     மட்டக்களப்பு கல்லடி  சுவாமி விபுலானந்தர் முதியோர் இல்ல வளாகத்தில் 23 மாலை  இடம் பெற்றது.

விபுலானந்தர் முதியோர் இல்ல  முகாமையாளர் தலைமையில் முதியோர் விழா நடை பெற்றது . பிரதம விருந்தினர்களாக  சிராயினி சிவநாயகம் (sso erpa manmuna inorth) மற்றும்  துஷ்யந்தினி வேல்நாயகம் (erpa kachcheri)    ஆகியோர்    கலந்து கொண்டனர், சிறப்பு விருந்தினராக நிலூஜா  கிரிஷாந்தன்  பங்கேற்றிருந்தார்.

விருந்தினர் வரவேற்போடு நிகழ்வுகள் ஆரம்பமாகின,  முதியோர் தின விழாவினை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. மேலும் சிறுமியர்கள் கலாசார நடனங்கள், முதியோர் நடனங்கள் என்பன இடம் பெற்றன. விழா முடிவில் போட்டிகளின் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அத்தோடு இல்ல முதியோர்களுக்கு அன்பளிப்புக்களும் வழங்கப்பட்டன.









 

Comments