மட்டக்களப்பில் வாழ்க்கை பயிற்சி பயிற்றுனர்களுக்கான பயிற்சி பட்டறை இடம்பெற்றது.........
மனித வள பயிற்சி மற்றும் வழிகாட்டல் நிறுவனத்தின் ஏற்பாட்டில் வாழ்க்கை பயிற்சி பயிற்றுனர்களுக்கான பயிற்சி பட்டறை மட்டக்களப்பு YMCA மண்டபத்தில் இடம்பெற்றது.
இளைஞர்கள் மத்தியில் நேர்மறையான தாக்கத்தினை ஏற்படுத்துவதோடு சமூகத்தில் பின் தங்கிய நிலையில் மக்களின் வாழ்க்கை தரத்தினை மாற்றும் தொழில் முனைப்பில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவதோடு அவர்களுடைய பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான ஆலோசனைகள் வழிகாட்டுதல் மற்றும் தொழில் வன்மையை மேம்படுத்தும் நோக்கில் இப் பயிற்சி பட்டறை இடம்பெற்றது.
வளவாளராக இந்தியாவில் இருந்து வருகை தந்த சீதாலக்ஷ்மி சிவகுமார் கலந்து கொண்டார். நிகழ்வில், மாவட்டத்தில் ஆலோசனை வழிகாட்டல் மற்றும் தொழில் வழிகாட்டல் துறையில் பணி புரியும் ஆசிரியர்கள் மற்றும் கள உத்தியோகத்தர்கள் அரச சார்பற்ற நிருவனங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment