மட்டக்களப்பு மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளர் பிரபு கிரானில் மக்கள் சந்திப்பு........

 மட்டக்களப்பு மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளர் பிரபு கிரானில் மக்கள் சந்திப்பு........

எதிர்வரும் நவம்பர் 14 நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்காக வேட்பாளர்கள் வீடு விடாக சென்றும், பொது இடங்களில் மக்களை சந்தித்தும் தம் வாக்குகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை தேசிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் கந்தசாமி பிரபு கிரானில் மக்கள் சந்திப்பை ஏற்படுத்தி மக்களின் குறைகளை கேட்டறிந்து கொண்டார். இதன் போது கடந்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பாரிய வெற்றியை கண்டது போன்று, இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிடும் தம்மை ஆதரிக்குமாறும் மக்களை கேட்டுக் கொண்டார்.

இதன் போது இவருடன் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.






Comments