தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் 'கிழக்கு நமதே' - தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டுவைப்பு............
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் 'கிழக்கு நமதே' - தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டுவைப்பு............
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் 'கிழக்கு நமதே' தேர்தல் விஞ்ஞாபனம் மட்டக்களப்பில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை முதலமைச்சரும், முன்னால் கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் மட்டக்களப்பு கூழாவடியில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது.
தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னால் மாகாண சபை உறுப்பினருமாகிய பூ.பிரசாந்தன் உள்ளிட்ட அம்பாறை திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் கட்சியின் சார்பில் தேர்தலில் இம்முறை போட்டியிடும் வேட்பாளர்களும் இதன் போது கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் கட்சியின் உபதலைவர் நாகலிங்கம் திரவியம், கட்சியின் இளைஞர் அணி செயலாளர் சண்முகலிங்கம் சுரேஸ்குமார், மகளிர் அணி செயலாளர், கட்சியின் பிரதிச் செயலாளர்கள், கட்சியின் தேசிய மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதன் போது தேர்தல் கிழக்கு நமதேனும் தேர்தல் விஞ்ஞாபனத்தின் பிரதிகள் கட்சியில் ஆலோசகர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் என அனைவருக்கும் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment