மட்டக்களப்பு மாவட்டத்தில் திட்டமிட்டபடி அஞ்சல் மூல வாக்களிப்பு இடம்பெறும்: மட்டு அரச அதிபர் தெரிவிப்பு............

 மட்டக்களப்பு மாவட்டத்தில் திட்டமிட்டபடி அஞ்சல் மூல வாக்களிப்பு இடம்பெறும்: மட்டு அரச அதிபர் தெரிவிப்பு............

மட்டக்களப்பு மாவட்டத்தில்   பாராளுமன்ற தேர்தலுக்கான  அஞ்சல் மூல வாக்களிப்பு தினங்ளில் எந்த மாற்றமும் இல்லையெனவும், ஏற்கனவே திட்டமிட்ட தினங்களில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறுமெனவும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 14 திகதி இடம் பெறவுள்ள பாராளுமன்ற பொது தேர்தலை முன்னிட்டு நாளைய தினம் (30) திகதி  தபால் மூல வாக்களிப்பிற்காக மாவட்ட செயலகம், பொலிஸ் நிலையங்கள் மற்றும் தேர்தல் அலுவலகம் ஆகியவற்றில் தபால் மூல வாக்களிப்பு இடம் பெறுவதற்கான முன்னாயத்த ஏற்பாடுகள்  பூர்த்தியாகியுள்ளன.

 இன் நிலையில், குறித்த தினங்களில் மாற்றம் ஏற்படவுள்ளதாக போலிச் செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில், அவ்வாறான செய்திகள் உண்மைக்குப் புறம்பான செய்திகள் எனவும், ஏற்கனவே திட்டமிட்டபடி தபால் மூல வாக்களிப்பிற்காக தேர்தல் திணைக்களத்தினால் ஒதுக்கப்பட்ட தினங்களில் குறித்த காரியாலயங்களில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் எனவும்,  தபால் மூல வாக்களிப்பிற்காக விண்ணப்பித்த உத்தியோகத்தர்கள் குறித்த உண்மைக்கு புறம்பான செய்திகளை நம்ப வேண்டாம் எனவும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகருமான ஜஸ்டினா முரளிதரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் எம்.பீ.எம்.சுபியான் ஆகிய இருவரும் தெரிவித்துள்ளனர்.


Comments