கிறிசாலிஸ் நிறுவனம் மேற்கொண்ட முயற்சிகள் தொடர்பாக தெளிவுபடுத்தும் கலந்துரையாடல்.............

கிறிசாலிஸ் நிறுவனம் மேற்கொண்ட முயற்சிகள் தொடர்பாக தெளிவுபடுத்தும் கலந்துரையாடல்.............
நாடளாவிய ரீதியில் பல்வேறு வேலைத் திட்டங்களை அரச நிறுவனங்களுடன் இணைந்து செயலாற்றும் கிறிசாலிஸ் தன்னார்வத் தொண்டு நிறுவனம் மட்டக்களப்பு மாவட்டத்தில் தாம் மேற்கொள்ளும் வேலைத்திட்டம் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் ஏனைய அதிகாரிகளுக்குத் தெளிவு படுத்தும் நிகழ்வு புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபரும் செயலாளருமான ஜெஸ்டினா முரளீதரன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று, கோரளைப்பற்று வடக்கு, கோரளைப்பற்று வாழைச்சேனை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி மற்றும் வாழ்வாதார முன்னேற்ற உதவி நிகழ்ச்சி திட்டங்கள் தொடர்பாக தெளிவு படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் மாவட்ட செயலக அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், திட்டமிடல் மற்றும் கிறிசாலிஸ் நிறுவன அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர். 

Comments