மட்டக்களப்பில் சூரிய மின்கல படலம் நிறுவுதல் மற்றும் பராமரித்தல் தொடர்பில் பயிற்சி.............

 மட்டக்களப்பில் சூரிய மின்கல படலம் நிறுவுதல் மற்றும் பராமரித்தல் தொடர்பில்  பயிற்சி.............

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில், மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே;முரளிதரன் தலைமையில், சூரிய மின்கல படலம் நிறுவுதல் மற்றும் பராமரித்தால் தொடர்பில், இரண்டு நாள் பயிற்சி நிகழ்வு இன்று ஆரம்பமானது.

இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின் ஏற்பாட்டில் தொழில் வாய்ப்பின்றி காணப்படும் இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டத்தின் கீழ், இப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

பயிற்சியை நிறைவு செய்பவர்களுக்கு NVQ சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன. மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன், இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின் பணிப்பாளர் அனுராதி பெரேரா, இழப்பீடுகளுக்கான அலுவலக உதவி பணிப்பாளர் அருன் பிரதீபன், பொதுப் பயன்பாட்டு ஆணைக்குவின் உதவி பணிப்பாளர் ஜயசூரியன், மாவட்ட செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் வி.நவநீதன் உட்பட பலரும் இதில் கலந்துகொண்டனர்.

Comments