மட்டக்களப்பு உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தின் வெள்ளைப் பிரம்பு பாதுகாப்பு தினம்...............

 மட்டக்களப்பு உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தின் வெள்ளைப் பிரம்பு பாதுகாப்பு தினம்...............

மட்டக்களப்பு, உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச வெள்ளை பிரம்பு பாதுகாப்பு தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

'பார்வையற்றோருக்கு பாதை காட்டும் வெண்பிரம்பு' எனும் தொனிப்பொருளில், சர்வதேச வெள்ளை பிரம்பு பாதுகாப்பு தினம், உதயம் விழிப்புலனற்றோர் சங்க தலைவர் தலைமையில் நடைபெற்றது.

ஆன்மீக அதிதியாக மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீல மாதவானந்த ஜி மஹாராஜ் கலந்துகொண்டதோடு, பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரனும் பங்கேற்றார்.

கௌரவ விருந்தினர்களாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் மைதிலி பாத்லட் ஆகியோரும் கலந்து கொண்டனர். மற்றும்  மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் எஸ்.அருள்மொழி, அபிவிருத்தி உத்தியோகத்தரும், உதயம் விழிப்புலனற்றோர் சங்க ஆலோசகருமான விநாயகமூர்த்தி உட்பட உதயம் விழிப்புலனற்றோர் சங்க உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

2024 சர்வதேச வெள்ளை பிரம்பு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, அதிஷ்ட இலாப சீட்டிழுப்பும், உதயம் விழிப்புலனற்றோர் சங்க உறுப்பினர்களின் வாழ்வாதார சுயதொழில் முயற்சிக்களுக்கான நிதி உதவிகளும் வழங்கி வைக்கப்பட்டது.

கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.

Comments