மட்டக்களப்பு லிட்டில் பட் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழா.......
மட்டக்களப்பு லிட்டில் பட் பாலர் பாடசாலையின் (Little Buds Montessori School) வருடாந்த விளையாட்டு நிகழ்வானது பாலர் பாடசாலை அதிபர் எம்.மிதுலா தலைமையில் செபஸ்டியார் ஆலய வளாகத்தில் இடம் பெற்றது.
தேசிய கீதம் இசைத்து ஒலிம்பிக் சுடர் ஏற்றி நிகழ்வுகள் ஆரம்பமாகியது. 2025ம் ஆண்டு பாடசாலை செல்லவுள்ள சிறார்களினால் அதிதிகளுக்கு மாலை அணிவித்து பாண்டு வாத்தியம் முழங்க வரவேற்கப்பட்டனர்.
Comments
Post a Comment