BDCA Division-3 சுற்றுப்போட்டியில் ஏறாவூர் YSSC வெற்றி.............

BDCA Division-3 சுற்றுப்போட்டியில் ஏறாவூர் YSSC   வெற்றி.............

மட்டக்களப்பு கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்து நடாத்தப்பட்டு வரும் 2024ம் ஆண்டுக்கான Division-3 போட்டியில் தொடர்ச்சியாக மூன்றாவது வெற்றியை பதிவு செய்து அரை இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது ஏறாவூர் YSSC அணியினர்.

மட்டக்களப்பு சிவானந்த விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் ஏறாவூர் யங்ஹீரோஸ் விளையாட்டு கழகத்தை 06 விக்கெட் வித்தியாசத்தில் YSSC அணியினர்  வெற்றி கொண்டது.

முதலில் துடுப்பெடுத்து ஆடிய YHSC அணியினர் 48.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 164 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில் YSSC அணி சார்பாக ஹிசாம் ஆட்டமிழக்காமல் 50 ஓட்டங்களையும், ரிபாஸ் 33 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். பந்துவீச்சில் YSSC அணி சார்பாக ரிசாம் 25 ஓட்டங்களை கொடுத்து 4 விக்கெட்டுகளையும், ரிப்கி 42 ஓட்டங்களை கொடுத்து 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி  இருந்தனர். 

பதிலுக்கு துடுப்புபெடுத்தாடிய YSSC அணி 22.2 ஓவர்களில் 04 விக்கெட்டுக்களை  166  வெற்றி இலக்கை அடைந்தனர், துடுபாட்டத்தில் பிலால் நிப்ராஸ் தனது அதிரடி மூலம் 65 பந்துகளில் 88 ஓட்டம் பெற்றார், இதில் 10 பவுண்ரி 5 சிக்ஸர் அடங்கும்.  இளம் வீரர் சம்ரி 35 பந்துகளில் 35 ஓட்டங்களை பெற்றார் இதில் 5 பவுண்ரி 1 சிக்ஸர் அடங்கும் மேலும் பாஹிம் 21 ஓட்டங்களை பெற்றார். போட்டியின் சிறப்பாட்டக்காரராக பிலால் நிப்ராஸ் தெரிவு செய்யப்பட்டார் 

Comments