கிழக்கு மாகாண மட்ட Aids குழு கூட்டம்....................
கிழக்கு மாகாண மட்ட Aids குழு கூட்டம் மட்டக்களப்பில் இடம் பெற்றது, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எந்திரி என்.சிவலிங்கம் அவர்களின் ஒருங்கிணைப்பில் இடம் பெற்ற நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுனர் பேராசிரியர் ஜயந்தலால் ரட்ண சேகர அவர்கள் தலைமையில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையின் கேட்போர் கூட மண்டபத்தில் இடம் பெற்றது.
இதன் போது கிழக்கு மாகாணத்தின் அம்பாரை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் கடந்த ஆண்டும் இவ்வாண்டும் HIV தொற்றுக்குள்ளானோர் தொடர்பான விபரங்கள் மற்றும் மாவட்ட மட்டத்தில் HIV நோயை கட்டுப்படுத்தும் வண்ணம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக இதன் போது அளிக்கை செய்யப்பட்டதுடன், HIV நோயை கட்டுப்படுத்துவதற்கு தேவையான முன்னேற்பாடுகள் தொடர்பாகவும் அதற்காக ஏனைய திணைக்களங்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பாகவும் இதன் போது விரிவாக ஆராயப்பட்டது.
இதன் போது கிழக்கு மாகாண ஆளுனர் குறித்த HIV தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தம்மால் இயன்ற முயற்சியினை மேற்கொள்வதாக தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் பீ.எஸ் ரத்னாயக்க, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் மாகாண பணிப்பாளர் டீ.ஜீ.எம்.கொஸ்தா, மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ஜஸ்டீனா முரளீதரன், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளரும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருமாகிய வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் உள்ளிட்ட சுகாதார துறை சார் அதிகாரிகள், கல்வித் திணைக்கள அதிகாரிகள், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment