2024 ஆம் ஆண்டுக்கான நத்தார் கரோல் பாடல் போட்டிக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.........

  2024 ஆம் ஆண்டுக்கான நத்தார் கரோல் பாடல் போட்டிக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.........

கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்துள்ள நாடளாவிய ரீதியிலான 2024 ஆம் ஆண்டுக்கான நத்தார் கரோல் பாடல் போட்டிக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களம் இந்த ஆண்டு (2024) கிறிஸ்தவ பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் கிறிஸ்தவர்களுக்காக கிறிஸ்மஸ் கரோல் பாடல் போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளது.

இந்தப் போட்டியானது சிங்களம் மற்றும் தமிழ் மொழி ஊடகத்தில் நடைபெறவுள்ளதுடன் குழுப்பாடலாக வழங்கப்பட வேண்டும் என்றும் அதிகபட்ச நேரம் 03 நிமிடங்கள். பங்கேற்பவர்களின் அதிகபட்ச எண்ணிக்கை 15 மற்றும் குறைந்தபட்சம் 10 ஆக இருக்க வேண்டும்.

ஒரு விண்ணப்பத்தார் ஒரு மொழி ஊடகத்தில் மட்டுமே விண்ணபிக்க முடியும். கரோல் பாடலானது புதிய படைப்பாக இருக்க வேண்டும். பாடல் வரிகள், மெல்லிசை மற்றும் இசை வேறு எந்த போட்டியிலும் வெற்றி பெற்றிருக்கக் கூடாது.

இத்துடன் திணைக்களம் வழங்கும் பொதுப் பாடலையும் பாட வேண்டும். உருவாக்கப்படும் பாடல் பின்வரும் குணங்களை கொண்டதாக இருக்க வேண்டும். அதாவது அர்த்தமுள்ள பாடல் வரிகள் மற்றும் மெல்லிசை தரமானதாக இருக்க வேண்டும். அர்த்தமுள்ள செய்தி வழங்கப்பட்டு இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பவர்கள் இரண்டு தொலைபேசி இலக்கங்களை குறிப்பிட வேண்டும். விண்ணப்பங்கள் ஆங்கிலத்திலே தயாரிக்க வேண்டும். தேவையான இசைக்கருவிகள் குழுவால் வழங்கப்பட வேண்டும். முக்கியமான வாத்தியமாக கிட்டார் அல்லது வயலின் தபேலா பயன்படுத்தலாம்.

விண்ணப்பம் இறுதி தினம் 21.10.2024 ஆகும் இவற்றை அருட்தந்தை, முதல்வர் அல்லது நிறுவனத் தலைவர்களின் பரிந்துரையுடன் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கும்படி வேண்டப்பட்டுள்ளனர்.

Comments