விவேகானந்த மகளிர் கல்லூரியில் தரம் 02 பயிலும் மாணவர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம்..............
மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்த, விவேகானந்த மாணவர் ஒன்றியத்தின் ஒழுங்கு படுத்தலில் இன்றைய தினம் (24) காலை 8.30 மணி முதல் 1.30வரை மட்டக்களப்பு விவேகானந்த மகளிர் கல்லூரி நடராஜானந்த மண்டபத்தில் சு.ரவிஷங்கர் தலைமையில் இலவச கண்சிகிச்சை முகாமுக்கு கண் வைத்திய நிபுணர் வைத்தியர் P.ஸ்ரீகரநாதன் அவர்கள் பொறுப்பாளராக கடமையாற்றினார்.
கண் சிகிச்சை முகாமுக்கு 10 பாடசாலைகளில் இருந்து வருகை தந்த 164 மாணவர்கள் பரிசோதிக்கப்பட்டு 17 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டார்கள். இச் செயற் திட்டமானது கடந்த 06 வருடங்களாக நடை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
பாடசாலை மாணவர்களின் கண் குறைபாடுகள் சிறுவயதிலேயே இனம் காணப்பட்டு சிகிச்சை வழங்கப்படுவதோடு இலவச மருத்துவ கண்ணாடிகளும் வழங்கப்படுகிறது.
இது போன்ற இலவச சிகிச்சை முகாம்களால், மாணவர்களின் கல்வி மேம்பாடு உயர்வடைகிறது, பெற்றோரின் மருத்துவ சுமை குறைக்கப்படுகிறது, இத்தன்னார்வ செயற்பாட்டை சிவானந்த விவேகானந்த மாணவர் ஒன்றியமானது பல வருடகாலமாக முன்னிறுதி செய்து வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Comments
Post a Comment