கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில், வசந்தன் திருவிழா..............
கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில், வசந்தன் திருவிழா..............
கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக நடன, நாடக துறை முதலாம் வருட நாடக பிரிவு மாணவர்கள் வழங்கும் வசந்தன் திருவிழா 2024 சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக நாவல் மரத்தடி வளாகத்தில் இடம்பெற்றது.100 மாணவர்கள் பங்குபற்றிய, ஆறு வசந்தன் ஆற்றுகைகள், மாணவர்களின் இசை நாடகம் என்ற பாடத்திட்டத்தினை அடிப்படையாகக் கொண்டு ஆற்றுகை செய்யப்பட்டது. சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக நடனத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் மோகனதாஸூன் நெறியாள்கையில், நடன நாடகத் துறை தலைவர் தாட்சாயினி பரமதேவன் தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது.
பிரதம விருந்தினராக கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் பாரதி கெனடி கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட கலாசார உத்தியோகத்தர் மலர்ச்செல்வனும், கௌரவ விருந்தினர்களாக வசந்தன் அண்ணாவிமார்களான தேனூரான் க.தருர்மரத்தினம், கலைச்செல்மல் வசந்தன் கோல் ப.நல்லதம்பி ஆகியோரும் பங்கேற்றனர். சிரேஷ்ட விரிவுரையாளர்கள், உதவி விரிவுரையாளர்கள் என பலரும் இதில் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment