மட்டக்களப்பு மாவட்டம் ஓந்தாச்சிமடம் பிரதான வீதியில் பாரிய விபத்து...........
(வரதன்) மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குபட்பட்ட மட்டக்களப்பு, கல்முனை பிரதான வீதியின் ஓந்தாச்சிமடத்தில் ஞாயிற்றுக்கிழமை (01.09.2024) மாலை பாரிய விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான போரூந்து ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதியதாலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளது.
சம்பவம் அறிந்த களுவாஞ்சிகுடி போக்குவரத்துப் பொலிசார் ஸ்த்தலத்திற்கு விரைந்து நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர். இவ்விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் மிகவும் பலத்த காயங்களுக்குட்பட்ட நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்கைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை வட்டாரம் தெரிவிக்கின்றது.
இந்நிலையில் குறித்த விபத்தில் முச்சக்கர வண்டி சுக்குநூறாக நொருங்கியுள்ளதுடன், பேரூந்தின் முன்பகுதிக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Comments
Post a Comment