மாகாண மட்ட போட்டியில் சாதனை படைத்த கணேசா வித்தியாலய மாணவன் நிலுக்ஸன்.....
2024ம் ஆண்டுக்கான பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்டப்போட்டிகளில், கிழக்கு மாகாணத்தை பிரநிதித்துவப்படுத்திய மட்டக்களப்பு, மண்முனை மேற்கு கரையாக்கன்தீவு கணேசா வித்தியாலத்தின் மாணவன் ஞானப்பிரகாசம் நிலுக்சன் தங்கப்பதகத்தினை சுவிகரித்து சாதனை படைத்துள்ளார்.
ஞானபிரகாசம் நிலுக்சன் 16 வயதுப்பிரிவில் 800 மீட்டர் ஓட்டப்போட்டியில் கலந்து கொண்டு 2 நிமிடம் 11 செக்கன்களில் ஓடி முடித்து வெற்றியை தனதாக்கி தங்கப்பதக்கத்தை சுவீகரித்ததுடன், மற்றுமொரு போட்டியான 300 மீட்டர் சட்ட வேலி ஓட்டப்போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப்பதக்கத்தையும், மற்றுமொரு நிகழ்வான 400 மீட்டர் ஓட்டப்போட்டியில் கலந்து கொண்டு வெண்கலப்பதக்கத்தை பெற்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கும், பாடசாலைக்கும் பெருமையை தேடிக் கொடுத்துள்ளார்.
இவருக்கான கௌரவிப்பு நிகழ்வை அன்மையில் கரையாக்கன்தீவு கணேசா வித்தியாலயமும், காந்தி விளையாட்டு கழகமும் இனைந்து மிகச்சிறப்பாக நடாத்தி இருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Comments
Post a Comment