KSCயின் KPLகுதுகல ஆரம்பம்.......

KSCயின் KPLகுதுகல ஆரம்பம்.......

மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகம் வருடந்தோறும் நடாத்தி வரும் கோட்டைமுனை பிரிமியர் லீக் (KPL) போட்டிகள் 8வது தடவையாக KPL இணைப்பாளர் செ.ரஞ்சன் அவர்களின் தலைமையில் 17.08.2024 அன்று கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தில் குதுகலமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 2012ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கோட்டைமுனை பிரிமியர் லீக் போட்டிகளில் கோட்டைமுனை விளையாட்டு கழகம் மற்றும் EPP அக்கடமியில் இனைந்திருக்கும் அங்கத்தவர்களை ஒன்றினைத்து 06 குழுக்களாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கிடையே போட்டிகள் நடாத்தப்படுகின்றன. இவ் பிரிமியர் லீக் போட்டிகளில் கிரிக்கெட், உதைபந்தாட்டம் மற்றும் கரப்பந்தாட்ட போட்டிள் நடைபெறுகின்றது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

வருடந்தோறும் சகல அங்கத்தவர்களை ஒன்றினைத்து புது ஒன்றினைப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் மூத்த உறுப்பினரான செ.ரஞ்சன் அவர்களின் சிந்தனையில் உருவாக்கப்பட்ட இப்போட்டிகள் வருடந்தோறும் நடைபெற்ற போதிலும், சிற்சில காரணங்களினால் சில வருடங்கள் போட்டிகள் நடாத்த முடியாமல் கடந்து சென்றது.

கடந்த வருடத்தில் இருந்து கிரிக்கெட் போட்டியானது கடினபந்துக்கு மாற்றப்பட்டதுடன், கரப்பந்தாட்டமும் இணைத்துக் கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும். இப்போட்டிகள் 17, 18 மற்றும் 19ம் திகதி வரை நடைபெறுகின்றது குறிப்பிடத்தக்க விடயமாகும்.











 

Comments