காத்தான்குடியில்தொடரும் யுக்திய நடவடிக்கை...............
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் யுக்திய போதை ஒழிப்பு திடீர் சோதனை நடவடிக்கை (27) முன்னெடுக்கப்பட்டது.
காத்தான்குடி, ஆரையம்பதி, புதுக்குடியிருப்பு, நாவற்குடா ஆகிய பகுதிகளில், பொலிஸார் நடாத்திய திடீர் சுற்றி வளைப்பு தேடுதல்களின் போது 23பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் சட்ட நடவடிக்கைக்குட்படுத்தப்பட்டதோடு, காத்தான்குடிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
Comments
Post a Comment