மட்டக்களப்பு மாவட்ட இளம் எழுத்தாளர்களுக்கான இலக்கியச் செயலமர்வு......
புத்த சாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, இலங்கை கலைக் கழகம், கலாசார அலுவல்கள் திணைக்களம், மட்டக்களப்பு மாவட்ட செயலகம் ஆகியன ஒன்றிணைந்து நடத்தும் மாவட்ட இளம் எழுத்தாளர்களுக்கான இலக்கியச் செயலமர்வு (26) சிறப்பாக நடைபெற்றது.
தமிழ் இலக்கியத் துறையில் எழுத்தாளர்களின் பங்குபற்றுதலையும், தேசிய ரீதியில் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்குடனும் இச் செயலமர்வு இடம்பெற்றது.
செயலமர்வில் வளவாளராக பேராதனை பல்கலைக்கழக தமிழ் துறை தலைவரும் பேராசிரியருமான ஸ்ரீ பிரசாந்தன் கலந்து கொண்டார். மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலகப் பிரிவுகளில் இருந்தும் தெரிவு செய்யப்பட்ட இளம் எழுத்தாளர்கள் செயலமர்வில் பங்கேற்றனர்.
Comments
Post a Comment