மட்டு மாவட்ட செயலக உத்தியேகத்தர்களின் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் செயலமர்வு....
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பணிபுரியும் உத்தியோகத்தர்களின் மன அழுத்தத்தை குறைத்து ஓர் இனிய நாளாக அமைத்துக் கொள்வதற்கான ஒரு செயற்பாட்டு செயலமர்வு (09) அன்று மட்டக்களப்பு, சத்துருக்கொண்டான் சர்வோதயா மண்டபத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்களின் நலனில் அக்கறை கொண்டு மாவட்ட அரச அதிபர் ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் ஆலோசனைக்கு அமைய, மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந் அவர்களின் வழிகாட்டலில், உதவி மாவட்ட செயலாளர் கு.பிரனவன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில் மாவட்ட செயலகத்தில் பணிபுரியும் சகல கிளைகளிலும் இருந்து முதல் கட்டமாக சுமார் 50 மேற்பட்ட உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
இச் செயலமர்வை சுவாமி விபுலானந்தர் அழகிய கற்கைகள் நிறுவகத்தின் விரிவுரையாளர் க.மோகனதாஸ் அவர்கள் நெறிப்படுத்தி இருந்தார். உண்மையில் இன்றைய தினம் உத்தியோகத்தர்களின் மனசோர்வு, மன உளைச்சல், மன அழுத்தம் அற்ற ஓர் புதிய உலகத்தை சந்தித்ததாக உத்தியோகத்தர்கள் கருத்து தெரிவித்தனர்.
Comments
Post a Comment