தமிழ் மக்கள்விடுதலை புலிகள்கட்சியின் எழுச்சி மாநாடு.............

 தமிழ் மக்கள்விடுதலை புலிகள்கட்சியின் எழுச்சி மாநாடு.............

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் 2024ம் ஆண்டுக்கான அம்பாறை மாவட்ட எழுச்சி மாநாடு அம்பாறை காரைதீவு கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் யோகராஜா சந்திரகுமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், வாகன ஊர்வலம் நடைபெற்று தேசிய கொடி, மாகாண கொடி, கட்சி கொடிகள் அதிதிகளால் ஏற்றப்பட்டன.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான சிவநேசத்துரை சந்திரக்காந்தன் மாநாட்டில் கலந்து சிறப்பித்தார்.

நிகழ்வில் கட்சியின் பிரதம பொருளாளர் ஆ.தேவராசா கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரின் பிரத்தியேக செயலாளரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தேசிய அமைப்பாளருமான தம்பிராஜா தஜிவரன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

Comments