காத்தான்குடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில், வீதிப் புனரமைப்பு........
மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் மேற்கொள்ளப்பட்டு வரும் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை காத்தான்குடி பிரதேச செயலாளர் u.உதயஸ்ரீதர் நேரடியாக களத்துக்குச் சென்று பார்வையிட்டார்.
புதிய காத்தான்குடி அப்ரார் வீதியின் புனரமைப்பு பணிகளை பார்வையிட்ட பிரதேச செயலாளர், வீதியின் தரம் மற்றும் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் தொடர்பிலும் ஆய்வு செய்தார்.
குறித்த பிரதேசத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தருடனும் பிரதேச செயலாளர் கலந்துரையாடினார்.
Comments
Post a Comment