காத்தான்குடி மத்திய கல்லூரி கடின பந்து கிரிக்கட் அணி...
இப்போட்டி 08.08.2024 அன்று காத்தான்குடி மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.
இதன் மூலம் காத்தான்குடி மத்திய கல்லூரி கடின பந்து அணி தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளதுடன் டெஸ்ட் போட்டி ஒன்றை முழுமையாக வெற்றி கொண்ட முதல் சந்தர்ப்பமாகவும் இது அமைத்துள்ளது.
50 ஓவர்கள் கொண்ட இப்போட்டியில் முதல் இனிங்சில் துடுப்பெடுத்தாடிய ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை அணி சகல விக்கட்டுகளையும் இழந்து, 63 ஓட்டங்களைப் பெற்றது. இதில் காத்தான்குடி மத்திய கல்லூரி அணி சார்பில் ஸைத் அலி 8.1 ஓவர்கள் பந்து வீசி 20 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளை கைப்பற்றினார்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய காத்தான்குடி மத்திய கல்லூரி அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 66 ஓட்டங்களை பெற்றது. இதில் தில்ஹாம் 27 ஓட்டங்களைப் பெற்றார்.
மீண்டும் இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவரில் 1 விக்கட்டை இழந்து 96 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் ஹிஷாம் 2 ஓவர்கள் வீசி 14 ஓட்டங்களுக்கு 1 விக்கட்டை கைப்பற்றினார்.
94 ஓட்டங்களை இலக்காக கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய காத்தான்குடி மத்திய கல்லூரி அணி 7 விக்கட்டுக்களை இழந்து 95 ஓட்டங்களைப் பெற்று 3 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.
காத்தான்குடி மத்திய கல்லூரி அணி சார்பில் ஹிஷாம் 26 ஓட்டங்களையும் உமர் சுஆத் 15 ஓட்டங்களையும் பெற்றனர்.
இந்த வெற்றியின் மூலம் காத்தான்குடி மத்திய கல்லூரி அணி மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த கடின பந்து அணியானது காத்தான்குடி மத்திய கல்லூரியின் 2004 AL வகுப்பு பழைய மாணவர்களின் பூரண அனுசரணையில், கல்லூரியின் அதிபர் M.A.M. நிஹால் அகமட் அவர்களின் வழிகாட்டலில், உடற்கல்வி ஆசிரியர் MFM. நஸ்பர் அவர்களால் நிர்வகிக்கப்படுகின்றது.
Comments
Post a Comment