மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் சபைக்கான இணையத்தள அங்குரார்ப்பணம்.....
மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் சபைக்கான இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வும், மாவட்ட சிறுவர் சபையின் துளிர் மடல் வெளியிட்டு நிகழ்வும் மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் சபையின் ஏற்பாட்டில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தசுதர்ஷனி ஸ்ரீகாந்தின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவனின் ஒழுங்கமைப்பில் AU லங்கா நிறுவன நிதி அனுசரணையில் புதிய மாவட்ட செயலகத்தின் தொழில்நுட்ப கூடத்தில் நிகழ்வு இடம் பெற்றது.
காணிப்பிரிவுக்கான மேலதிக மாவட்ட செயலாளர் நவரூபரஞ்ஜனி முகுந்தன், மாவட்ட தொழில்நுட்ப உத்தியோகத்தர் கே.லக்ஷிக்கா, மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் தி.மதிராஜ், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், AU லங்கா நிறுவனத்தின் பிரதிநிதிகள், மாவட்ட சிறுவர் சபை தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சிறுவர் சபை உறுப்பினர்கள் என பலரும நிகழ்வில் கலந்துகொண்டனர்.
'துளிர்' செய்திமடலின் முதல் பிரதி மாவட்ட சிறுவர் சபை பிரதிநிதிகளினால் மாவட்ட அரசாங்க அதிபரிற்கு வழங்கி வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், ஏனைய அதிதிகளுக்கும் சிறப்பு பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
மாவட்ட சிறுவர் சபையின் பிரதிநிதிகள் மற்றும் பிரதேச சிறுவர் சபையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு 'நெறிமுறையுடன் கூடிய ஊடக செய்தி அறிக்கையிடல்' எனும் தொனிப்பொருளில், சுயாதீன ஊடகவியலாளர் உ.உதயகாந்தினால், செயலமர்வொன்றும் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment