ஏறாவூர் பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிச்நகர் - ஹிஸ்புல்லாஹ் நகரில் வர்த்தகர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
போதைப்பொருள் பாவனையாளர்கள் வர்த்தக நிலையத்தை கொள்ளையடிக்க வந்த நிலையில் தான் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவத்தில் திருமணம் முடிக்காத நிலையில் கடை நடாத்தி வந்த 45 வயதுடைய தாவூத் என்பவர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை கைது செய்து சட்டநடவடிக்கை மேற்கொள்ள ஏறாவூர் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments
Post a Comment