மட்டக்களப்பில் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு.............
இலங்கை புற்றுநோய் சங்கத்தின், மட்டக்களப்பு கிளையின் ஏற்பாட்டில் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை (27) வவுணதீவு புதுமண்டபத்தடி சுகாதார பரிசோதனை நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டது.
லயன்ஸ் கழகத்தின் அனுசரணையில் புற்றுநோய் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் தலைவர் வைத்தியர் E.சிறிநாத் தலைமையில் இச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. புற்றுநோய் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் உப தலைவர் V.பார்த்தீபன், லயன்ஸ் கழக பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது மகப்பேற்று வைத்திய நிபுணர் K.E.கருணாகரனினால் பெண் நோயியல் மற்றும் புற்றுநோய் தொடர்பாக விளக்கங்களும் வழங்கப்பட்டன.
Comments
Post a Comment