மரப்பாலம் பகுதியில் தலை கீழாக உருண்டு புரண்ட ஜீப்................

மரப்பாலம் பகுதியில் தலை கீழாக உருண்டு புரண்ட ஜீப்................

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மரப்பாலம் பகுதியில் ஜீப் ஒன்று விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கண்டியிலிருந்து மட்டக்களப்பு பகுதிக்கு விடுமுறையினை கழிக்க வந்த குடும்பம் ஒன்றின் ஜீப் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன் போது ஜீப்பில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் மகாஓயா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

குறித்த ஜீப் வண்டியில் ஐந்து பேர் பயணித்த நிலையில் விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.  இருவர் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதிகவேகமாக வந்த வாகனம் வேகத்தினை கட்டுப்படுத்த முடியாமல் நீண்ட தூரத்திற்கு பாய்ந்து சென்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Comments