மண்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான வைத்திய முகாம் முன்னெடுக்கப்பட்டது...................
மண்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான வைத்திய முகாம் முன்னெடுக்கப்பட்டது...................
மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலக ஒன்று கூடல் மண்பத்தில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் V.வாசுதேவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் செயலக உத்தியோகத்தர்களுக்கான வைத்திய முகாம் (25) ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
தொற்றா நோய்களுக்கான வைத்திய பரிசோதனை முகாம் சுகாதார வைத்திய அதிகாரி பிரசாந்தி லதாகரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட வைத்திய முகாமில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் V.வாசுதேவன் உட்பட பெரும்பான்மையான செயலக உத்தியோகத்தர்கள் வைத்திய முகாமில் கலந்து கொண்டனர்.
இவ் வைத்திய முகாமில் கீழ்கண்ட தொற்றா நோய் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன, நீரிழிவு, குருதி அழுத்தம், உடல் திணிவு சுட்டி, மார்பக புற்று நோய், கண் பரிசோதனை, கர்ப்பப்பை கழுத்து புற்று நோய், இதய நோய் பரிசோதனை போன்றவற்றிக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் வைத்தியசாலை தாதியர்களும் இதில் பங்கேற்று வைத்திய அதிகாரிகளுக்கு தமது பங்களிப்பை வழங்கி இருந்தனர்.
Comments
Post a Comment