சிடாஸ் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டுவரும் மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிப்பதற்காக செயற்றிட்டம்...........

 சிடாஸ்  அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டுவரும்  மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிப்பதற்காக செயற்றிட்டம்...........

மட்/மமே/இலுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலயத்தில் தரம் 10 கற்கும் மாணவர்களின் அடைவு மட்டத்தை மேம்படுத்தும் பொருட்டு சிடாஸ் மட்டக்களப்பு அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்றிட்டத்திற்கு வலுவூட்டும் வகையில் மாத இறுதியில் மாணவர் - பெற்றோர்களுக்கான உள வலுவூட்டல் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் (24)  உள வலுவூட்டல் செயற்பாடுகள் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

மேலதிக வகுப்புகள் தொடர்பான முன்னேற்றம் மற்றும் சவால்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது. அத்துடன் அலகுப் பரீட்சையில் மாணவர் பெற்ற புள்ளிகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டதுடன், அவை தொடர்பாக உரிய ஆலோசனைகளும் அளிக்கப்பட்டது. இம்மேலதிக வகுப்புகள் தம் பிள்ளைகளது கற்றலை மேம்படுத்த உதவுவதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.

இச்செயற்பாடுகளில் வித்தியாலய அதிபர் எஸ்.கிரிசாந்தன் அவர்களும் இச்செயற்றிட்டத்தின் வளவாளர்களும் மற்றும் சிடாஸ் மட்டக்களப்பு அமைப்பின் அங்கத்தவர்களான முத்துராஜா புவிராஜா, சுப்பிரமணியம் கணேஷ், கந்தையா ரவிச்சந்திரன், கணபதிப்பிள்ளை லிங்கராஜா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.









Comments