மட்டக்களப்பு பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் அமிர்தகளி கிளை திறந்து வைப்பு...............
மட்டக்களப்பு, பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் அமிர்தகளி கிளை இன்று நவீன மயப்படுத்தப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாண கூட்டுறவு திணைக்களத்தின் கீழ் இயங்கி வரும் மட்டக்களப்பு பல நோக்கு கூட்டுறவு சங்கம் மாவட்டத்தில் கூட்டுறவு கிளை சங்கங்களை நவீன மயப்படுத்தலுடன் புனரமைப்பு செய்யப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்றகாக கையளிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில் மட்டக்களப்பு அமிர்தகளி பல நோக்கு கூட்டுறவு சங்க கிளை இன்று திறந்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் டி.காந்தன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில், மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.வி.தங்கவேல், மட்டக்களப்பு பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் அமிர்தகளி பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் கிளைக்குழு தலைவர் டி.ராஜேந்திரன், மட்டக்களப்பு பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் பொது முகாமையாளர் ரஜினிகாந்த், மட்டக்களப்பு பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் உப தலைவர் இராயப்பு மற்றும் மட்டக்களப்பு பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்கள்இ ஊழியர்கள் இ பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment