மட்டக்களப்பு மாவட்ட தொழில் வல்லுநர்கள், சிவில் சமூக ஆர்வலர்கள் மற்றும் சட்டத்தரணிகள் சங்கத்தினரை சந்தித்தார் ஜனாதிபதி....

மட்டக்களப்பு மாவட்ட தொழில் வல்லுநர்கள், சிவில் சமூக ஆர்வலர்கள் மற்றும் சட்டத்தரணிகள் சங்கத்தினரை சந்தித்தார் ஜனாதிபதி....

நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த அரசாங்கம் ஆரம்பித்துள்ள மூலோபாய வேலைத்திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்காவிட்டால் மீண்டும் வரிசை யுகத்திற்கு செல்ல நேரிடும் எனவும் அந்த நிலையைத் தடுப்பது அனைத்து தொழில் வல்லுநர்களின் பொறுப்பாகும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த தொழில் வல்லுநர்களுடன் மட்டக்களப்பு சன்சைன் ஹோட்டலில்  (03) நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்டபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் வைத்தியர்கள், பொறியியலாளர்கள், மகளிர் அமைப்புக்கள், வர்த்தக சங்கங்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் சட்த்தரணிகள் சங்கத்தினர் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.





Comments