காத்தான்குடி பிரதான வீதியில் விபத்து: இளைஞர் உயிரிழப்பு..............

 காத்தான்குடி பிரதான வீதியில் விபத்து: இளைஞர் உயிரிழப்பு..............

மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதான வீதியில் நேற்று இரவு இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

காத்தான்குடி குட்வின் சந்தியிலிருந்து பிரதான வீதி வழியாக வேகமாகச் சென்ற மோட்டார் சைக்கிள் காத்தான்குடி ஆறாம் குறிச்சி மீரா பாலிகா தேசிய பாடசாலை சந்தியில். வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞன் காத்தான்குடி டீன் வீதியை சேர்ந்த 20 வயதுடைய ஸஹ்ரான் சாகி என்பவர் என பொலீசார் தெரிவித்தனர். காயமடைந்த இளைஞர்கள்  மட்டக்களப்பு போதா வைத்தியசாலையிலும், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலீசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Comments