காத்தான்குடியில் இலவச மருத்துவ முகாம்............
மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு ரோட்டரி கழகத்தின் அனுசரணையில் இலவச வைத்திய சேவை முகாம் ஒன்று காத்தான்குடி அன்பர் வித்யாலயத்தில் நடைபெற்றது.வெளிநாட்டில் தொழில் புரிபவர்களின் குடும்பங்களுக்காக இந்த வைத்திய முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் சிறுவர்களுக்கான பற்பரிசோதனை, பொதுவான வைத்திய பரிசோதனை,புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்வு,கண் பரிசோதனை மூக்கு கண்ணாடி வழங்கள் போன்றவைகள் இடம் பெற்றன.காத்தான்குடி பிரதேச செயலாளர் U.உதயஸ்ரீதரின் வழிகாட்டலில் நடைபெற்ற வைத்திய முகாமின் ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு ரோட்டரிக் கழகத்தின் தலைவர் வைத்தியர் முரளிதரன், காத்தான்குடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் சில்மியா உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ரோட்டரிக் கழகத்தின் முக்கியஸ்தர்கள், வைத்தியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment