மட்டு, மாவட்ட பிரதம கணக்காளர் பஸீர் ஓய்வு பெறுகின்றார்....

 மட்டு, மாவட்ட பிரதம கணக்காளர் பஸீர் ஓய்வு பெறுகின்றார்....

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளரும், சமுர்த்தி பிரிவின் பதில் கணக்காளருமான மீராசாய்வு பஸீர் அவர்கள் 06.08.2024 முதல் ஓய்வு பெற்று செல்கின்றார். 

சுமார் 30 வருடங்களாக அரச பணியில் தன்னை அர்ப்பணித்து சேவையாற்றி விடைபெற்று செல்லும், அவருக்கான ஒரு பிரியாவிடை நிகழ்வை மட்டக்களப்பு மாவட்ட செயலக சமுர்த்தி பிரிவு உத்தியோகத்தர்கள் 05.08.2024 அன்று மாவட்ட செயலகத்தில் மாவட்ட பணிப்பாளர் S.ராஜ்பாபு அவர்களின் தலைமையில் நடாத்தி இருந்தனர்.

மீராசாய்வு பஸீர் அவர்கள் தான் பதவி வகித்த காலத்தில் கூடுதலான காலங்கள் சமுர்த்தி பிரிவில் கணக்காளராக கடைமயாற்றி இருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும். மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இவர் பதவி வகித்து வந்ததும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்நிகழ்வில் சமுர்த்தி சிரேஸ்ட முகாமையாளர்கள், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்த கொண்டனர்.














Comments