மட்டக்களப்பு நீதிமன்றிற்கு அழைத்துவரப்பட்ட கைதி தப்பியோட்டம்............

 மட்டக்களப்பு நீதிமன்றிற்கு அழைத்துவரப்பட்ட கைதி தப்பியோட்டம்............

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்திற்கு, இன்றைய தினம், வழக்கு விசாரணைகளுக்காக அழைத்து வரப்பட்ட கைதியொருவர், தப்பியோடிய சம்பவம் பதிவாகியுள்ளது.

கிளிநொச்சி இரணைமடுப் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய கைதி, களுவாஞ்சிக்குடிப் பகுதியில் இடம்பெற்ற குற்றச் செயல்களுக்காக தண்டனைக் கைதியாக, தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இன்று வழக்கு விசாரணைகளுக்காக, நீதிமன்றிற்கு அழைத்து வரப்பட்டபோது, கைதி மலசல கூடத்திற்கு செல்ல வேண்டும் என கூறியநிலையில் அவரை மலசலகூடத்திற்கு சிறைக்காவலர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். மலசலகூட கூரைப் பகுதி ஊடாக கைதி தப்பித்துச் சென்ற நிலையில், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையினை களுவாஞ்சிக்குடிப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


Comments