அரச உத்தியோகத்தர்களுக்கான ஆன்மீக கருத்தரங்கு......

 அரச உத்தியோகத்தர்களுக்கான ஆன்மீக கருத்தரங்கு......

இலங்கைக்கு விஜயத்தினை மேற்கொண்டுள்ள தஞ்சாவூர் இராமகிருஸ்ண மடத்தலைவர் ஸ்ரீமத் சுவாமி விமூர்தானந்தஜீ அவர்கள் இலங்கையின் பல்வேறு பட்ட இடங்களுக்கும் சென்று தற்காலத்திற்கு ஏற்ற விதத்திலான ஆன்மிக மற்றும் வாழ்வின் ஒளி எனும் விடயத்தின் ஊடாக கருத்தரங்குகளை நடாத்தி வருகின்றார்.

இதன் அடிப்படையில் மட்டக்களப்பு இராமகிருஸ்ண மிசன் மடத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில்  மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சின் ஸ்ரீகாந் அவர்களின் தலைமையில் (23)ம் திகதி அரச உத்தியோகத்தர்களுக்கான ஆன்மீக கருத்தரங்கு தஞ்சாவூர் இராமகிருஸ்ண மடத்தலைவர் ஸ்ரீமத் சுவாமி விமூர்தானந்தஜீ அவர்களால் நடாத்தப்பட்டது.

இக்கருத்தரங்கில் மாவட்ட செயலக காணிப்பிரிவுக்கான மேலதிக மாவட்ட செயலாளர் நவரூபரஞ்ஜனி முகுந்தன், நிர்வாக உத்தியோகத்தர்  மணிவண்ணன் பல்வேறுபட்ட அரச திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.




Comments