சமுர்த்தி வங்கியில் நகை அடவு ஆரம்பிக்கப்படவுள்ளது.....

 சமுர்த்தி வங்கியில் நகை அடவு ஆரம்பிக்கப்படவுள்ளது.....

சமுர்த்தி வங்கியூடாக நகை அடவுப்பிரிவு மிக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. மாவட்டத்தில் ஒரு சமுர்த்தி வங்கியில் இத்திட்டம் ஆரம்பிக்கப்படவள்ளது. இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஆரையம்பதி சமுர்த்தி வங்கியில் முதல் அடவுச்சேவை ஆரம்பிப்பதற்கான ஆயத்த பணிகளை மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.ராஜ்பாபு நேரில் சென்று பார்வையிட்டதுடன் அதற்கான ஆலோசனைகளையும் வழங்கி இருந்தார்.

ஆரையம்பதி சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் S.நவரஞ்சன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ் ஆயத்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி சிரேஸ்ட முகாமையாளர் AM.அலி அக்பர் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி வங்கி ஊழியர்களும் கலந்து கொண்டனர். இதன் போது ஆரையம்பதி சமுர்த்தி வங்கியில் பயிரிடப்பட்ட வெள்ளிரிப்பழத்தின் அறுவடையும் நடைபெற்றது ஒரு பழத்தின் எடை 4 முதல் 5 கிலோ வரை இருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.






Comments