மட்டக்களப்பில் தபால் மூல வாக்களிப்பிற்கான, வாக்குச்சீட்டு விநியோக பணிகள் ஆரம்பம்.................

 மட்டக்களப்பில் தபால் மூல வாக்களிப்பிற்கான, வாக்குச்சீட்டு விநியோக பணிகள் ஆரம்பம்.................

மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் மூல வாக்களிப்பிற்காக, ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான வாக்குச்சீட்டுக்களை விநியோகிக்கும் பணி இன்று  (27)  ஆரம்பமானது.

அரச திணைக்களங்கள் ஊடாக விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு, வாக்குச் சீட்டுகளை விநியோகிக்கும் பணியை மட்டக்களப்பு பிரதான அஞ்சல் அலுவலகம் ஆரம்பித்துள்ளது.

செப்டம்பர் மாதம் 4ம் திகதி, மாவட்டச் செயலகம், மாவட்ட தேர்தல் அலுவலகம் மற்றும் பொலிஸ் நிலையங்களில் தபால் மூல வாக்களிப்பு நடைபெறவுள்ளது. செப்டம்பர் மாதம் 5 மற்றும் 6ம் திகதிகளில் ஏனைய அரச திணைக்களங்களில் தபால் மூல வாக்களிப்பு நடைபெறும்.

இத்தினங்களில் வாக்களிக்க தவறிய, தபால் மூல வாக்காளர்கள் செப்டம்பர் 11 மற்றும் 12ம் திகதிகளில் மாவட்ட தேர்தல் திணைக்கள அலுவலகத்தில் வாக்களிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments