புனித மிக்கல் கல்லூரி மாணவன் வி.பிருத்திகன் தங்கப் பதக்கம் சுவீகரித்தார்.....
இலங்கை பாடசாலை மல்யுத்த சங்கத்தினால் நடாத்தப்பட்ட தேசியமட்ட விளையாட்டுப் போட்டியில், மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரி மாணவன் வி.பிருத்திகன் 20 வயதுக்குட்பட்ட பிரிவில் 97Kg எடைப்பிரிவில் பங்குபற்றி தங்கப் பதக்கம் பெற்று, மட்டக்களப்பு மாவட்டத்திற்கும், புனித மிக்கல் கல்லூரிக்கும் பெருமையை தேடிக் கொடுத்துள்ளார்.
இவரை கௌரவிப்பு நிகழ்வு (12) புனித மிக்கல் கல்லூரியில் மிகவும் சிறப்பாக நடைபெற்றதுடன், இம்முறை மாகாண மட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
Comments
Post a Comment