தேசிய மட்டதிற்கு தெரிவான அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலய மகளீர் உதைப்பந்தாட்ட அணிகள்..............
தேசிய மட்டதிற்கு தெரிவான அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலய மகளீர் உதைப்பந்தாட்ட அணிகள்..............
(கடோ கபு) 2024ம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு நிகழ்வின் குழு நிலை விளையாட்டுக்கள் கடந்த மாதமிருந்து நடைபெற்று வரும் நிலையில் மகளீர் மற்றும் ஆடவர் அணிகளுக்கான உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டிகள் கடந்த மூன்று தினங்களாக அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்று வந்த நிலையில் இன்று (28) அனைத்து வயதுப் பிரிவினருக்குமான இறுதி போட்டியானது இடம்பெற்றிருந்தது.
இவ் விளையாட்டு நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலையத்தை பிரதிநிதித்துவப்படுத்தி மட்/மமே/அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலயத்தின் 20 வதுக்குட்பட்ட மகளீர் அணியும், 17 வயதுக்குட்பட்ட மகளீர் அணியும் கலந்து கொண்டிருந்த நிலையில் மிகுந்த போட்டித் தன்மைகளுக்கு மத்தியில் தங்களது திறமைகளை மீண்டுமொருதடவை நிருபித்து 20 வயதுக்குட்பட்ட மகளீர் 1வது இடத்தை பெற்று அணி சம்பியனாக தெரிவானதுடன் 17 வயதுக்குட்பட்ட மகளீர் அணி 3 வது இடத்தை பெற்று கொண்டது.
இவ் வெற்றிகளின் மூலம் குறித்த அணிகளானது பாடசாலைக்கும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்கும் பெருமையினை தேடிக்கொடுத்துள்ளனர். கடந்த பல வருடங்களாக காற்பந்தாட்டம் மற்றும் கரப்பந்தாட்டத்தில் பலம் மிக்க அணிகளை உருவாக்கிக்கொண்டிருக்கும் அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலய உடற்கல்வி பிரிவினரை வாழ்த்துகிறேன்.
குறிப்பாக கடந்த பல வருடங்களாக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மகளீர் அணிகளே கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான காற்பந்தாட்ட போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் இம் முறையும் அது முற்றுப்பெறாமல் தொடர்ந்துள்ளதில் பெருமை கொள்கிறோம்
இவ் வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் பாடசாலை சமூகத்தினர் தங்கள் சார்பான வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கின்றனர்.
தேசியத்திலும் இவ் வீராங்கனைகள் சாதிக்க எமது சார்பான வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்
Comments
Post a Comment