மட்டக்களப்பில் சிவாநந்தியர் கௌரவிக்கும் நிகழ்வு..............
மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலையின் (26) ஒன்றுகூடல் வேளையில் சக்தி Crown நிகழ்ச்சியில் 3ம் இடத்தினை பிடித்து சிவானந்தா தேசிய பாடசாலைக்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த பிரதீபன் சிற்சபேசன் அவர்களுக்கும், மாகாண மட்டத்தில் பாடசாலைக்கு கல்வி கலாச்சார விடயங்களில் பெருமை சேர்த்த சிவாநந்தியர்களை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபரின் தலைமையில் இடம்பெற்றது.
இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக வைத்தியர் கங்காதரன் அவர்கள் கலந்து கொண்டதுடன், பழைய மாணவர் சங்க தலைவர் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வ.வாசுதேவன், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் மற்றும் பிரதி ஆணையாளர் இறைவரித் திணைக்களம் த.குணராஜா, பழைய மாணவியும், களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளருமான சிவப்ரியா வில்வரெட்ணம், பாடசாலை பழைய மாணவரும், பிரதி வலய கல்வி பணிப்பாளருமான ஹரிஹரராஜ், பிரதி அதிபர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினரும், பழைய மாணவியும் முன்னாள் விவேகானந்தா வித்தியாலய அதிபருமான திலகம் ஹரிதாஸ் ஆசிரியை, பழைய மாணவரும் முன்னாள் அதிபருமான (முதலைகுடா மகாவித்தியாலயம்) அகிலேஸ்வரன் ஆகியோருடன் விளையாட்டு இணைப்பு செயலாளர், சர்வதேச இணைப்பு செயலாளர், மாணவர் சங்க செயலாளர் ஆகியோருடன் சிற்சபேசன் அவர்களின் தந்தையும் பழைய மாணவருமான கலாநிதி பிரதீபன், அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
Comments
Post a Comment