பட்டிருப்பு காந்திபுரம் கலைமகள் வித்தியாலயத்திற்கு போட்டோப்பிரதி இயந்திரம் கையளிக்கப்பட்டது................

 பட்டிருப்பு காந்திபுரம் கலைமகள் வித்தியாலயத்திற்கு போட்டோப்பிரதி இயந்திரம் கையளிக்கப்பட்டது................

மட்டக்களப்பு, பட்டிருப்பு காந்திபுரம் கலைமகள் வித்தியாலயத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனால் போட்டோப்பிரதி இயந்திரம் கையளிக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் நிதியொதுக்கிட்டின் கீழ் பாடசாலைக்கான போட்டோப்பிரதி இயந்திரம் கையளிக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் சா.சத்தியசீலன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதமவிருந்தினராக இரா.சாணக்கியன், பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் மு.மதிமேனன், வலயக்கல்வி அலுவலக கல்வி மேம்பாட்டு உத்தியோகத்தர் சோ.பத்மராஜா, ஆசிரியர்கள், கிராம முன்னேற்றச்சங்கத்தினர், பெற்றோர்கள், பழைய மணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Comments