மட்டக்களப்பில் ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் உலக தமிழ் கலை இலக்கிய மாநாடு ...................

மட்டக்களப்பில்  ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில்  உலக தமிழ் கலை இலக்கிய மாநாடு ...................

கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபை ஏற்பாட்டில் உலகத்தமிழ் கலை இலக்கிய மாநாடு மட்டக்களப்பு மாநகர சபையினால்  ஏற்பாடு செய்யப்பட்டது.

அரசடி சந்தியில் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையை கௌரவ கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களால் திறந்து வைக்கப்பட்டதை அடுத்து, உலக தமிழ் கலை இலக்கிய மாநாடு மட்டக்களப்பு அரசடி சந்தியிலிருந்து அலங்கரிக்கப்பட்ட ஊர்திகள், மாணவர்களின் கலை நிகழ்வுகளால் அலங்கரிக்கப்பட்டு நடை பவணியாக வெபர் விளையாட்டரங்கை சென்றடைந்தது.

விழாவில் இலங்கை அஞ்சல் திணைக்களத்தால் உலக தமிழ் கலை இலக்கிய மாநாடு இலங்கையில் நடைபெற்றத்தை நினைவூட்டும் முத்திரையும் வெளியிடப்பட்டு கௌரவ ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து மலேசியா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சரவணன் அவர்களுக்கும் ஏனைய அழைப்பாளர்களுக்கும் முத்திரை வழங்கி வைக்கப்பட்டது சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.





Comments