மாமாங்கம் சகாயபுரம் தூய சதா சகாய அன்னை ஆலய வருடாந்த திருவிழா நிறைவு................
மட்டக்களப்பு, மாமாங்கம் சகாயபுரம் தூய சதா சகாய அன்னை ஆலய வருடாந்த திருவிழா இன்று காலை கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது.
மட்டக்களப்பு மறை மாவட்ட குரு முதல்வர் ஜோர்ச் ஜீவராஜ் அடிகளார் தலைமையில், பங்குதந்தை அலக்ஸ் ரோபட் அடிகளார் மற்றும் அருட்பணி ஜுட் அடிகளார் ஆகியோர் திருவிழா கூட்டு திருப்பலியை இணைந்து ஒப்புகொடுத்தனர்.
நேற்று மாலை நடைபெற்ற திருஜெபமாலை, நற்கருணை ஆராதனையைத் தொடர்ந்து அன்னையின் திருவுருவ பவனி இடம்பெற்றது. பங்கு மாணவர்களுக்கு நற்கருணை, உறுதிபூசுதல் அருள் அடையாளங்கள் வழங்கப்பட்டு திருவிழா கூட்டுத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
திருப்பலியை தொடர்ந்து ஆலய முன்றலில் இடம்பெற்ற விசேட ஆராதனை வழிபாடுகளை அடுத்து அன்னையின் திருச்சொரூப ஆசியுடன் கொடியிறக்கம் இடம்பெற்றது. திருவிழா திருப்பலியில் பங்கு மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment