ரணில் விக்கிரம சிங்கவின் வெற்றி நிச்சயம் இல்லை: முன்னாள் பிரதி அமைச்சர் எம் எஸ் அமீரலி..........

 ரணில் விக்கிரம சிங்கவின் வெற்றி நிச்சயம் இல்லை: முன்னாள் பிரதி அமைச்சர் எம் எஸ் அமீரலி..........

(வரதன்)  இலங்கையில் வாக்கு வங்கிகள் உள்ள கட்சியாக மொட்டு கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் தான் காணப்படுகின்றது ரணில் விக்கிரம சிங்கவின் வெற்றி நிச்சயம் இல்லை  என முன்னாள் பிரதி அமைச்சர் எம் எஸ்  அமீரலி தெரிவித்துள்ளார்.

தற்போதைய தேர்தல் கலவரம் படி ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க மூன்றாவது இடத்தில் உள்ளார், அடுத்து வரும் சில தினங்களில் நாமல் ராஜபக்ச இந்த இடத்துக்கு வந்து விடுவார், ஏனெனில் அவர்களது கட்சிக்கு என்று ஒரு வாக்கு வங்கி உள்ளது. 
இலங்கையில் வாக்கு வங்கிகள் உள்ள கட்சியாக மொட்டு கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் தான் காணப்படுகின்றது. ரணில் உடைய கட்சிக்கு வாக்கு வங்கி இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். ஜேவிபி கட்சிக்கும் 4 லட்சம் வகையான வாக்குகள் காணப்படுகிறது தற்போது அக்கட்சி ஒரு வளர்ச்சி போக்கினை காட்டுகிறது.
நமது ஜனாதிபதி வேட்பாளரின் வெற்றியில் தான் இங்குள்ள அவர்களின் வெற்றி தங்கி உள்ளது. உங்களது பகுதிகள் அபிவிருத்தி காணப்பட வேண்டு மானால்  சஜித்தின் வெற்றி முக்கியம். சஜித் பிரேமதாசா அவருக்கு 54 லட்சம் வாக்குகள் ஏற்கனவே உள்ளது, இருப்பினும் மேலதிகமாக 15 லட்சம் வாக்குகளே எமக்கு தேவைப்படுகின்றது அதற்கான பணிகளை நாம் தற்போது முன்னெடுத்து வருகின்றோம்.
 சஜித் பிரேமதாசாவின் வெற்றி நிச்சயம், அவருடன் இலகுவாக அணுகி எமது வேலை திட்டங்களை முன்னெடுக்க முடியும், ஏற்கனவே மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கையிலே அதிகமான வீட்டுத் திட்டங்களை அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுத்தவர் அவர் ஜனாதிபதி ஆனாலும் இந்த வீடமைப்பு அமைச்சை தன்னிடமே கொண்டு அனைத்து வேலைகளையும் நிறைவேற்றிக் கொள்ள திட்டமிட்டுள்ளார். எனவே ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றி நிச்சயம் இல்லை அனைவரும் வெற்றி வேட்பாளர் கட்சிக்கு உடன் இணைந்து பணியாற்ற முன்வருமாறு  மட்டக்களப்பில்  இன்று  ஐக்கிய மக்கள் சக்தி கட்சி ஆதரவாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது முன்னாள் பிரதி அமைச்சர் எம் எஸ்  அமீரலி இவ்வாறு கருத்து தெரிவித்தார்.




 

Comments