தொடரும் சிவானந்தாவின் சாதனைகள் ..............
இவ் வருடமும் மட்டக்களப்பு சிவானந்தா பாடசாலையின் பெயரை தேசிய மட்டத்தில் பதித்த மல்யுத்த வீரர்களான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலையின் ஒன்றுகூடல் வேளையில் இடம்பெற்றது.
இதன் போது ஒரு தங்கப்பதக்கம், இரண்டு வெள்ளிப்பதக்கங்கள் 02 வெண்கலப்பதக்கங்கள் சுவீகரிக்கப்ப்ட்டது. முதலாவது தங்கப்பதக்கம் 18 வயதிற்குட்பட்டோருக்கான (45-48) பிரிவில் G.கவிசன் அவர்களும், இரண்டு வெள்ளிப்பதக்கங்களை 18 வயதிற்குட்பட்டோருக்கான (73-78) பிரிவுகளில் T.விஸ்ணு மற்றும் 18 வயதிற்குட்பட்டோருக்கான (63-78) பிரிவில் F.பிரதீஸ் அவர்களும் வெண்கலப்பதக்கங்களை 20 வயதிற்குட்பட்டோருக்கான (58-63) பிரிவில் H.கிருஜன் மற்றும் 20 வயதிற்குட்பட்டோருக்கான (73-78) பிரிவில் B.மிதுசா ஆகியோரும் பெற்று வெற்றியை தேடிக் கொடுத்துள்ளனர்.
இவ் நிகழ்வானது பாடசாலையின் பிரதி அதிபர் குலேந்திரகுமார் அவர்ககளின் ஒருங்கிணைப்பில் பாடசாலையின் அதிபர் தயாபரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இவ் நிகழ்வில் மட்டக்களப்பு சிவானந்தா பாடசாலையின் பழைய மாணவர் சங்க தலைவர் வ.வாசுதேவன், பழைய மாணவர் சங்க உறுப்பினரும், பாடசாலையின் முன்னாள் ஆசிரியரான ஹ.திலகவதி அவர்களும், சான்டோ சங்கரதாஸ் விளையாட்டுக்கழகத்தின் தலைவரான சி.பார்த்தீபன் அவர்களும் கலந்து கொண்டனர்.
கடந்த முறை தேசிய மட்டத்தில் 5 பதக்கங்களை பெற்ற நாம் இம்முறை 8 பதக்கங்களாக அதிகரித்துள்ளோம். இதனை பெற அயராது பாடுபடும் எமது பழைய மாணவரும் மல்யுத்த விளையாட்டு தேசிய மட்ட பயிற்றுவிப்பாளர் வே.திருசெல்வம் அவர்களுக்கு நன்றிகளை தெரிவிப்பதுடன், இம்முறை மாணவர்களுடன் இணைத்து பெற்றோர்களும் கௌரவிக்கப்பட்டனர். இவ் மல்யுத்த போட்டிக்கு ஒத்துழைப்பு வழங்கும் பெற்றோர் மற்றும் அதிபர், பாடசாலை சமூகத்திற்கு நன்றிகள் தெரிவிக்கப்ட்டது.
Comments
Post a Comment