கிழக்கு மாகாண மட்ட கடின பந்து கிரிக்கெட் போட்டியில் சிவானந்தா சம்பியன்.....
2024ம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான கடின பந்து கிரிக்கெட் போட்டியில், மட்டக்களப்பு சிவாநந்தா வித்தியாலயம் மாகாண மட்ட போட்டியில் வெற்றி பெற்று சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை மட்ட கடின பந்து கிரிக்கெட் போட்டிகள் பலவாறு முன்னேற்றம் கண்டு வருவதை அவதானினக்க முடிகின்றது. இதற்காக பாடசாலை சமூகம் ஒன்றினைந்து செயலாற்றி வருவதை எம்மால் அவதானிக்க முடிகின்றது. இறுதிப்போட்டியானது ஏறாவூர் அறாபா கல்லூரியுடன் நடைபெற்றது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இதற்காக உழைத்த மாணவர்களின் பெற்றோர்கள், பொறுப்பான ஆசிரியர்கள், அதிபர், பிரதி அதிபர்கள், பாடசாலை பயிற்றுவிப்பாளர் குறிப்பாக சிவானந்தா வித்தியாலயத்தின் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் டிஷாந்த் ஆகியோருக்கு பாடசாலை சமூகம் சார்பாக நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாக அறிவித்துள்ளது.
Comments
Post a Comment