வவுணதீவு பிரதேசத்தில் காட்டு யானைகளின் தொல்லையால் மக்கள் அவதி......

வவுணதீவு பிரதேசத்தில் காட்டு யானைகளின் தொல்லையால் மக்கள் அவதி......

மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் காட்டு யானைகளின் தொல்லையால் மக்கள் தொடர்ச்சியாக சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இலுப்பபடிச்சேனை, நாவல்தோட்டம் போன்ற கிராமங்களுக்குள் இன்று அதிகாலை சில யானைகள் ஊடுருவி நபர் ஒருவரின் காணியில் இருந்த ஐந்து தென்னை மரங்களையும் பயிர்களையும் அழித்து சேதப்படுத்தியுள்ளது.

சுமார் 25 கிலோ மீற்றர் துரத்திலுள்ள யானை தடுப்பு மின்சார வேலியினை கடந்து யானைகள் மக்கள் குடியிருப்புக்குள் நுளைந்து உடமைகளை சேதப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments